இராமரின் மகன் குமாருவுக்கும் சின்னக்குட்டிக்கும் ஏற்பட்ட திருமண பந்தத்தின் இல்லற வாழ்வு காரணமாக விசாலாட்சி, தங்கமுத்து எனும் மூத்தவர்களுக்கு அடுத்ததாக செல்லப் பிள்ளையாகிய எனது பேரனாரின் ஜனனமும் 1921ல் நிகழ்ந்தது.
குமாரு அவர்கள் நிறைந்த இறை பக்தியுள்ளவர். பொலிகண்டிக் கந்தவேளிடத்தில் தங்கி கந்தசஷ்டி அனுஷ்டிப்பார். அக்காலங்களில் ஐயா சிறுவனாக இருந்தபொழுது தந்தையாருக்குத் தேவையானவற்றைக் கால்நடையாகச் சுமந்து செல்வார்.
ஆரம்பக் கல்வியை அப்பா பள்ளிக்கூடம் எனும் தாமோதர வித்தியாசாலை எனது பேரனாருக்கு வழங்கிக் கொண்டது. 6ம் வகுப்பு வரை அங்கேயே கல்வியைக் கற்றுக் கொண்டார். அக் காலகட்டத்தில் டாக்டர் கந்தசாமி இவரது பள்ளித் தோழனாக இருந்ததாகவும் அவருடன் சின்னச்சின்னச் சண்டை பிடிப்பதாகவும் எனக்குக் கூறுவதுண்டு.
பத்து வயதில் ஒரு நாள் இரவு ஐயாவுக்குக் காலில் விஷப் பாம்பு தீண்டிவிட்டது. தந்தையார் இவரைத் தன் தோளிற் போட்டுக் கொண்டு கொற்றவத்தையிற் பார்வை பார்த்துத் தான் தப்பியதாகவும் எனக்குக் கூறியிருக்கிறார்.
இன்றைய காலம் போலல்லாது சோழகக் காற்றுக்குத் தான் அப்பொழுது பட்டம் ஏற்றுவார்களாம். தனது ஊர்த் தோழனாகிய எனது தந்தையாரின் தகப்பன் ஐயாத்துரையுடன் இழைக் கயிற்றில் எட்டுமூலைப் பட்டம் ஏற்றுவது இவருக்குக் கொள்ளைப் பிரியம். பிற்காலத்தில் அப்பப்பா இவரை நாடு பூராகவும் கூட்டிச் சென்று "நட்புணர்வு" பாராட்டியிருக்கிறார். கொஸ்லாந்தை, அளுத்துமுல்லை, கதிர்காமம், அம்பாந்தோட்டை, கன்னியா அவற்றுட் சில.
தாயார் சின்னகுட்டி அம்மையார் வல்வெட்டித்துறைக்கு வீட்டில் குற்றிய அரிசியைக் கொண்டு சென்று விற்பது, அவரது பொருளீட்டலுக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட சளைப்பற்ற மனவுறுதியையும் குடும்பப் பாங்கையும் விளக்கி நிற்கின்றது. கடனுக்குக் கொடுத்த அரிசிக்குப் பணம் சேகரிக்க ஐயா சில நேரம் செல்வதுண்டு. இவ்வாறான மற்றவர்களுடன் "நல்லுறவு பேணும் பண்பு" கொண்டவர்கள்.
வல்வெட்டித்துறையில் பிரசித்தமான பெரிய உருண்டை எள்ளுப்பாகுகள் இரண்டு ஐயாவுக்கு நாளாந்தம் ஆச்சி சின்னக்குட்டி கொண்டுவந்து கொடுப்பாராம். ஆனால் ஐயா சின்னப்பிள்ளை என்பதால் அக்காள்மாருக்குக்கொடுப்பதில்லை.அக்காள்மார் நல்ல தமக்கைகளாக எவ்வாறு இருந்தார்களோ அதேபோல் நல்ல அன்னைகளாக இருக்க ஐயாவிலிருந்து பழகியிருக்கிறார்கள்.
ஐயாவின் மூத்த சகோதரி விசாலாட்சி வண்ணாங்குளத்தில் மணமுடிந்து வதிந்தவர். இது இயக்கச்சியிலிருந்து கிழக்கே 2- 3 கட்டையில் வயல்வெளிகளுக்கிடையில் அமைந்துள்ளது.அங்கு 100 வயதில் ஒரு திடகாத்திரமான ஒரு கிழவர் இருந்தார் என்று அடிக்கடி எனக்கு கூறுவதுண்டு. இளைய சகோதரி தங்கமுத்து என்றால் ஐயாவுக்கு உயிர். இவரும் வல்வெட்டித்துறைக்கு வியாபாரத்துக்காக தாயாருடன் சென்று குடும்பப் பழுவைத் தானும் சுமந்தவர். பிற்காலத்தில் இவ்விருவருக்கும் மணப்பேறாக ஒவ்வொரு ஆண்குந்தைகளும் பெண்குழந்தைகளும் பிறந்தனர்.
தாய், தந்தையரை இழந்து தமக்கையரின் அரவணைப்பில் எம் தெய்வம் அன்பு மடியின் கண் உறக்கத்தோடும் அன்போடும் வாழ்ந்து வந்தது. முறிகண்டிப் பயணம் இவரைத் தமக்கையரிடமிருந்து தற்காலிகமாகப் பிரித்துக் கொணடது. அன்றிலிருந்து முருகன், வைரவரை வணங்கிய ஐயாவுக்கு அடுத்தபடிச் சந்ததி பிள்ளையாரை வணங்கத் தலைப்பட்டது. எமது உயிரோடும் சதையோடும் 'பிள்ளையரே' என்ற நாமம் ஊறிப்போனது. அங்கு இவர் 30 வருடங்களுக்கு மேலாகத் தொண்டாற்றியவர்.
இக் காலகட்டத்தில் தான் 'ஆடுபாவத்தையான்' என்று இவரால் அன்பாக அழிக்கப்பட்ட ஆறுமுகாம் அவர்கள் (எனது தந்தையாரின் பேரனாரின் சகோதரர்) 30 வயதில் அம்மன் கோவிலடியில் வாழ்ந்துவந்த சீனிவாசகம் சின்னாச்சியின் மகள் சிவபாக்கியத்துக்கு மணம்முடித்து வைத்தார். இவர்களது இல்லறப் பேறாக அரிய நான்கு குழந்தைகள் முறையே தேவமலர், தேவராசா, தனலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோர் கிடைத்தனர். 1959 ஆம் ஆண்டு பங்குனித் திங்களன்ரு இவரால் அன்பாக நேசிக்கப்பட்ட மூத்த அக்காள் விசாலாட்சி காலமானார். சின்ன அக்காள் தங்கமுத்துவும் தனது பயணத்தை முடித்துக் கொண்டார்.
ஆச்சி சின்னக்குட்டி மாதிரியே தங்கமுட்துவும் கெட்டிக்காரி என்று ஐயா கூறியதுண்டு. அவரது இழப்பும் அவரின் மகளான மருமகளின் இழப்பும் (1979) ஐயவால் வேதனையோடு நினைவுகூரப்பட்டவை.
தனது மூத்த மகளை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையிற் கற்பித்து அவருக்குத் தக்க துணையாகிய இராசேந்திரத்தையும் வளங்களையும் பெற்றுக் கொடுத்தார். அடுத்தவர்களது வாழ்வு கடினமாகக் கடந்து போனது. இருந்தபொழுதிலும் "பிச்சை புகினும் கற்கை நன்று"
என்ற பொன்மொழியின் அடிப்படையில் கல்வியை மேற்கொண்டிருந்தனர். இரண்டாவது மகளை முத்த அக்காளின் மகன் நவரத்தினத்துக்கும்,கடைக்குட்டியை தனது தோழன் ஐயாத்துரையின் மகன் பொன்னம்பலநாதனிற்கும் அவர்கள்விருப்பத்துக்கமைவாக கைப்பிடித்துக் கொடுத்தார். ஏக புத்திரன் தேவராசா (ஐயா செல்லமாக அழைப்பது 'பொடியன்') தும்பளையைச் சேர்ந்த விக்னேஸ்வரியைக் கைப்பிடித்துக் கொண்டார்.
பேரக் குழந்தைகளோடு பகிடி விடுவதும் கதை சொல்வதும் பிள்ளைகளிற்கும் மருமக்களிற்கும் வேலைகளில் ஒத்தாசை செய்வதுமாக ஐயா மிகுந்த சந்தோசமாக வாழ்ந்து வந்தார். எதுவித குறையுமில்லாது ராஜாவாகவே வாழ்ந்து வந்தார்.
ஒவ்வொரு நாளும் பின்னேரம் "எடி பிள்ளை சைக்கிளை ஒருக்காத் தாவன் வீட்டை போட்டு வர ", "ஐயா! வயசு போன காலத்தில விழப் போறியளே!", "தம்பி நான் வரட்டே வீட்டை என்ற பிரயோகங்கள் வீட்டை நிறைக்கும். வழியில் தனக்குத் தெரிந்தவர்களை "எங்கடை லதா", "எங்கடை தம்பி" என்று உரிமை பாராட்டுவார். வழிதெருவில் பேசுவதும் முதல் அறிமுகமும் ஆங்கிலக் கலாசாரத்தை ஒத்த, காலநிலையைப் பற்றி அமைந்திருக்கும். "நல்ல வெயிலா இருக்கு இண்டைக்கு", "மப்புப் போடுது" , உந்தப் பக்கம் கறுத்துக் கிடக்கு", "மழை வருமாப் போலை கிடக்கு" என்பவை பொதுவாக ஐயாவால் கதைக்கப்படுபவை. தேவையில்லாத கதை பேச்சும் இவரிடம் இருந்திருக்கவில்லை. ஒழுக்கத்தைப் பற்றி சில தடவை எனக்குப் போதித்ததாக ஞாபகம் உண்டு. இவ்வாறானைவரது பண்பு பீட்டப் பிள்ளைகளையும் காணவைத்தது.
எனது பாலர் பருவத்தில் ஐயா வடுவாக்கட்டை வைரவரிடம் என்னைத் தூக்கியும் நடத்தியும் கூட்டிச்செல்லும் பசுமையான நினைவுகளும் என்முன் நிழலாடுகின்றன. தோட்டத்து வெளியில் தனது தலைப்பாகைத் துண்டால் எனது தலையையும் மூடி கையிற் பிடித்து அழைத்துச் செல்வார். ஐயாவைக் காணும் சிலர் தலைப்பாகையைக் கமக்கட்டுக்குள் வைத்து வணக்கம் சொல்வதும் எனக்கு நினைவிருக்கிறது. ஐயாவிலிருந்து நான் மண்வாசனையை முகர்ந்துகொண்டேன். எல்லோரையும் அன்பு செலுத்தியவர் எனது ஐயா என்றால் அது மிகையாகாது. "கூடி வாழ வேண்டும்" என்ற கோட்பாட்டை என்னுட் புகுத்தியவரும் அவரே.
இறுதிக் காலகட்டத்தில் 20 வருடங்களுக்கு மேலாக தனது கடைக்குட்டியுடன் வாழ்ந்த பொழுது வந்த எல்லாக் கஷ்டங்களையும் தானும் ஒருவராகச் சுமந்து சென்றவர்.
எனது தம்பியை முன்பள்ளிக்குக் கூட்டிச் சென்று பள்ளி முடியும் வரை பின்வாங்கிற் காத்திருந்து கூட்டிவருவார். ஐயா இன்றி அவன் பள்ளி போகான். தங்கையைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவதும் ஐயாவைக் கொண்டு தூக்கி நாங்கள் மூவரும் தெருவில் உலாத்துவதும் எமக்கு குழந்தைப் பருவத்தின் இனிமைகளைநினைவுபடுத்துகின்றது.
எங்கள் வீட்டில் எந்த ஒரு நிகழ்விலும் ஐயா தான் பெரிய மனுஷன். புதுச் சாரம் கட்டி புது மேலங்கி அணிந்து மஞ்சட்பொட்டின் நடுவே ஒரு குங்குமமிட்டு காலின்மேற் கால் போட்டு கையிருக்கையிற் கைவைத்து அமர்ந்திருப்பார் அந்த மெல்லிய வாழைக்குடா உருவத்தோடு! 'முதியவர்களும் அவர்களது அனுபவங்களும் இளையவர்களின் சொத்து' என்ற கருத்தில் ஊறிப் போயிருந்த எனக்கு பிற்காலத்தில் மோட்டார்சைக்கிளில் ஊர் சுற்றுவதும் நான் கல்வி கற்கும் இடமென்று கல்வியியற் கல்லூரிக்குக் கூட்டிவந்ததும் என்னோடு ஐயாவின் பசுமரத்தாணி உறவைக் கோடிடுகிறது.
தனது தகப்பனாரது இறப்பின் பின் கந்தசஷ்டி விரதத்தை அனுஷ்டித்து வந்ததுடன் சமயத் தீட்சை கேட்டு ஆசாரமான வாழ்வு வாழ்ந்துவந்தவர். பிற்காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் துயிலெழுந்து குளித்து உல்லியனொல்லை அம்மன் கோயிலுக்குச் சென்று தெய்வம் போல் நடுக்கதிரையில் உட்கார்ந்திருக்கும் அழகை இங்கு விபரிக்க இயலாது..
திருமுறிகண்டித் திருத்தலம் சேதமாக்கப்பட்ட அன்று (2008இல்) தொடங்கிய காய்ச்சல் மெதுமெதுவாக அரித்து 31 தை 2009 அன்று நடந்தேறாதென்று நினைத்திருந்த நிகழ்வை நிகழ்த்திச் சென்றது. மோகன் அண்ணா வந்தார். மருத்துவமனையில் வைத்திருந்தோம், வேறு வைத்தியரிடம் காட்டினோம், தேவையான விருப்பத்திற்குரிய அனைத்துத் தின்பண்டங்களும் (கடைசிவரை கைவிடாத களி உட்பட) செய்து கொடுத்தோம். சுழிபுரத்திலிருந்து எண்ணெய் கொண்டுவந்து சிகிச்சை செய்தோம். எதுவும் முறிகண்டிப் பிள்ளையாரோடு போட்டியிட முடிந்திருக்கவில்லை. சஞ்சீ, சஞ்சீ என்றும் பிள்லை, பிள்ளை என்ரும் அபித்தா என்றும் "துசியே?" என்று கூர்ந்து பார்த்துக் கூறிய வார்த்தைகளும் மௌனித்துப் போயின. "தம்பி மெதுவாகத் தூக்கடா" என்ர அன்பும் பாசமும் சிறகு கட்டிக் கொண்டன. நாங்கள் என்ற கூட்டுக்குள் இருந்த கிளியொன்று, தன் கண்களாலும் பேசும் வல்லமை படைத்த தீபமொன்று கண்மூடிக் கொண்டது.
ஐயா நோயுற்றிருப்பதாக எனது அம்மம்மாவின் இளையசகோதரியின் மகள் லதா அன்ரி கனவு கண்டு கனடாவிலிருந்து அழைபெடுத்தார். ஐயாவுடன் கதைத்தார். அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் அழுதழுது கதைத்தவரின் அன்பையும் 'ஐயா நான் உங்களுக்குக் காசு அனுப்புறன். தேவையானது எல்லாம் வங்கிச் சாப்பிடுங்கோ" என்று தன் பணியை ஒரு பிள்ளையாகவே செய்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
"பவி எப்ப வருவான்?" என்ற கேள்வியோடு ஆத்மாவை தேக்கியிருந்த மனம் பெரியம்மாவின் இளைய மகன் பவிஅண்ணாவின் திருகோணமலையிலிருந்தான வரவோடு கடைசிப் பானத்தையும் அருந்திக் கடைசிப் பார்வையையும் பார்த்துக் கொண்டது. மோகன் அண்ணாவின் இளையவன் ஹம்சத்(பீட்டன்) ஐயா! ஐயா! என்று கூவியழைத்தான். நான் இடது மணிக்கட்டை மென்மையாகப் பற்றியிருந்தேன். இதயத்துடிப்பு திடீரென்று வேகமெடுத்தது. எங்கே என்று தேடினேன். நின்றே போனது.
ஆயிரம் நிலவின் அழகு கண்ட ஒரு மனிதனின் பாசத்தின் செறிவையும் தெளிவையும் அந்தக் கடைசித் தருணத்தின் அனுபவம் எனக்குப் பெற்றுத் தந்தது. முதுமை என்ற பொல்லாப் பிடியிலிருந்து நீங்கிப்போன ஐயாவின் ஆத்மா சாந்தியாக எமது அத்தனை அணுக்களும் மனமும் பிரார்த்திக்கின்றது.